மணிமேகலை தமிழில் உள்ள ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்று.
முதல் காப்பியமான சிலப்பதிகாரத்தின் நீட்சியாக அடுத்து எழுதப் பட்ட இரண்டாவது காப்பியம் ஆகும். கோவலன், கண்ணகி, மாதவி வரலாறு கூறுவது சிலப்பதிகாரம்
தமிழில் ஐம்பெருங்காப்பியங்கள் என்று அழைக்கப் படுகிற சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி ஆகியவற்றில் சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய இரண்டு மட்டுமே தமிழ்க் காப்பியங்கள்
முத்தொள்ளாயிரம் என்ற இந்த நூல் கால அளவையில் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் எழுதப் பட்டிருக்க வேண்டும் என அறிஞர்கள் வகைப் படுத்தியுள்ளனர். எனவே தான் இது செவ்வியல் இலக்கியங்கிளில் ஒன்றாக வரையறை செய்யப்பட்டுள்ளது.
இறையனார் களவியல் அல்லது இறையனார் அகப்பொருள் என்னும் நூல் தமிழரின் காதல் வாழ்க்கையைப் பற்றிக் கூறும் ஓர் அருமையான இலக்கண நூல். இது தொல்காப்பியத்துக்குப் பிந்தியது. சற்றொப்ப 2100 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கொள்ளலாம்.
ஆசாரக் கோவை என்பதற்கு ஒழுக்கங்களின் தொகுதி என்பது பொருளாம். தமிழில் ஆசாரம் என்ற சொல் ஒழுக்கம் என்னும் பொருளிலேயே பயன்படுத்தப்படுகிறது.