இன்று சுறவம் (தை) திங்கள் இரண்டாம் நாள் – உழைக்கும் தமிழர் அனைவரும் பொலிவுடன் கொண்டாடும் மாட்டுப் பொங்கல் நன்னாள்; இது உழவர் திருநாள் என்றும் அழைக்கப் படுகிறது. தமிழ் நாடு அரசு இந்நன்னாளை திருவள்ளுவர் நாள் எனவும் அறிவித்துள்ளது.
கருவில் தொடங்கி கல்லறையில் முற்றுப் பெரும் மனித வாழ்வின் நெடும் பயணம்; வாழ்க்கையின் வழித்தடம்; வரலாற்றின் தொடர்ச்சி என அனைத்தையும் அளந்து காட்டும் காலக் கருவியே ஓரை, நாள், வாரம், திங்கள், ஆண்டு என்பன ஆகும்.
சங்க இலக்கியத் தொகுப்பாக விளங்கும் பத்துப் பாட்டு வரிசையில் மூன்றாவதாக இடம் பெரும் நூல் சிறு பாணாற்றுப்படை ஆகும். ஆற்றுப் படை இலக்கியத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டு இந்நூலாகும்.
சங்க இலக்கியத் தொகுப்பில் ஒன்றான பத்துப் பாட்டுத் தொகுதியில் ஒளி முத்துகளாகத் திகழ்பவை ஆற்றுப்படை இலக்கியங்கள் ஆகும். அதில் இரண்டாவதாகத் திகழ்வது இன்று நாம் காணவிருக்கும் பொருநராற்றுப்படை.