13 Jun 2026 10:04 pm

அன்புடையீர்,
வணக்கம்.
இலெமுரியா அறக்கட்டளையின் சார்பில் எம் அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
நமது சமூக சேவைப் பயணத்தில் அடைந்துள்ள ஒரு முகாமையான சாதனையைத் தங்களுடன் மகிழ்ச்சியாகப் பகிர்ந்து கொள்வதில் பெருமைப் படுகிறோம்.

திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரைப்பட்டியில் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான மாணவர் விழா அரங்கம் மற்றும் மதிய உணவுக்கானப் பாதுகாப்பு கூடம் இலெமுரியா அறக்கட்டளையின் சார்பில் கட்டி முடிக்கப் பட்டு இன்று (12-6-2026) காலை மாணவர்களின் பயன் பாட்டிற்காகத் திறந்து வைக்கப் பட்டுள்ளது.

இதுவரை, அந்த இளம் மாணவர்கள் தங்களின் காலை உணவும் மதிய உணவும் திறந்த வெளியில், கடுமையான வானிலை மற்றும் பறவைகளின் கழிவுகளால் ஏற்படும் மாசுபாடு போன்ற சுகாதார கேடுகளுக்கு உள்ளாகியே உணவு உட்கொண்டு வந்தனர்.
தொடக்கத்தில், சுமார் ₹7.5 லட்சம் செலவில் ஒரு எளிய உணவுக்கூடம் அமைப்பதே நமது திட்டமாக இருந்தது. ஆனால், பள்ளி வளாகத்தை ஆய்வு செய்தபோது, மாணவர்களுக்கு பாதுகாப்பான உணவு இடம் மட்டுமின்றி, பல்நோக்கு பயன்பாட்டிற்கு ஏற்ற விரிவான மாணவர் விழா அரங்கம் (Function Hall) தேவையையும் உணர்ந்தோம்.
இந்த உயர்ந்த நோக்கை மனதில் கொண்டு, நாம் நமது நலன்விரும்பிகளிடம் வேண்டுகோள் விடுத்தோம். அதில் கிடைத்த நன்கொடைகளின் மூலம், இத்திட்டம் இன்று நிறைவேறியுள்ளது. நமது மதிப்பீட்டுத் தொகையை விட சற்று அதிகமாகவே செலவுகள் ஆகிடினும், தற்போது குழந்தைகள் தூய்மையான, மதிப்புமிகு சூழலில் பாதுகாப்பாக உணவருந்துகிறார்கள் என்பதைக் கண்ணுற்றபோது நமக்கு பெரும் மன நிறைவு ஏற்படுகிறது.

இந்தப் பணி நமது நன்கொடையாளர்களின் கருணை உள்ளம், ஈகைக் குணம், சமுகப் பொறுப்பின் அர்ப்பணிப்பு மற்றும் உளமார்ந்த பங்களிப்பு ஆகிவற்றை உணர்த்தும் சிறப்பான சான்றாக உள்ளது. இத்திட்டத்தை நிறைவேற்ற உதவிய ஒவ்வொரு நன்கொடையாளர்களுக்கும் எங்கள் உளமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் ஆதரவு இந்தக் குழந்தைகளின் உடல் நலம், மதிப்பு மற்றும் மகிழ்ச்சிக்கு நிலையான ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலெமுரியா அறக்கட்டளையின் அடுத்த முயற்சி காவல்துறை பணியாளர்களுக்கான நூலகம்அமைப்பது
சமூக முன்னேற்றத்தை நோக்கிய நமது பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, திருநெல்வேலி வட்டார DIG அலுவலகத்தில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்காக ஒரு நூலகத்தை நிறுவும் புதிய திட்டத்தை நாம் தொடங்குகிறோம்.
இத்திட்டம் குறித்து நாம் கடந்த்க 11 ஜூன் 2026 அன்று துணைக் காவல் துறைத் தலைவர் (DIG) திரு. இரா. திருநாவுக்கரசு, IPS அவர்களுடன் தொடக்க ஆலோசனைகளை மேற்கொண்டுள்ளோம். இந்த முயற்சி, பொதுச்சேவையில் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துள்ள காவல்துறை பணியாளர்களின் அறிவாற்றல் வளர்ச்சிக்கும் தொடர்ச்சியான கற்றலுக்கும் ஒரு உயர்ந்த வாய்ப்பாக அமையும் என்று நம்புகின்றோம்.

இலெமுரியா அறக்கட்டளை, சமூக சேவை, கல்வி மேம்பாடு, நலத்திட்டங்கள் மற்றும் பண்பாட்டு பாதுகாப்பு ஆகிய துறைகளில் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது.
எங்கள் இப்பணிகள் தொடர்ந்து முன்னேற உங்கள் ஆதரவை தாழ்மையுடன் மீண்டும் கோருகிறோம். சிறியதாக இருந்தாலும் பெரியதாக இருந்தாலும், ஒவ்வொரு நன்கொடையும் ஒரு வலுவான, நலவாழ்வு மற்றும் அறிவொளி நிறைந்த சமூகத்தை உருவாக்கும் பங்களிப்பாகும்.
நாம் அனைவரும் இணைந்து, குழந்தைகள், மாணவர்கள் மற்றும் பொதுச் சேவையில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் உரிய மதிப்பையும் வளமான ஒரு சமுதாயத்தையும் உருவாக்கலாம்.
தமிழும் நாமும் வேறல்ல தமிழே நம் வேர்!
ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள்)
கனிவான வாழ்த்துகளுடன்,
இலெமுரியா அறக்கட்டளைக்காக
சு.குமணராசன்
நிறுவுநர் & தலைவர்
Warm greetings from the Lemuriya Foundation.
We are delighted to share a milestone in our journey of service: the dedication of a Student Function Hall cum Mid-day Meal Shelter for primary school children.
Until now, these young students had to consume their breakfast and mid-day meals in the open, exposed to harsh weather and vulnerable to contamination from bird droppings—posing serious health and hygiene risks.

Our initial plan was to construct a modest meal shed at an estimated cost of ₹7.5 Lakhs. However, after surveying the school premises, we recognized the greater need: a larger multi-purpose function hall that could serve both as a safe dining shelter and a venue for student activities.
Moved by this vision, we appealed to our well-wishers. Thanks to your overwhelming generosity, this dream has become a reality. Today, children enjoy their meals in a clean, dignified environment—protected, safe, and cared for. This achievement stands as a testament to the compassion and commitment of our donors.
We extend our heartfelt gratitude to each one of you who made this possible. Your support has created a lasting impact on the health, dignity, and happiness of these children.

Continuing our mission of community upliftment, we are now embarking on a new project: establishing a Library for Police personnel at the DIG Office, Tirunelveli Range.
Our Chairman, Thiru S. Kumana Rajan, held initial discussions with DIG Thiru R. Thirunaukkarasu IPS on 11th June 2026. This initiative will provide knowledge resources and a space for continuous learning to those who dedicate their lives to public service.

The Lemuriya Foundation remains steadfast in its mission to serve society, uplift communities, and empower individuals through education, welfare, and cultural preservation.
We humbly solicit your continued support to carry forward these missions. Every contribution—big or small—helps us build a stronger, healthier, and more enlightened society. Together, we can ensure that children, students, and public servants alike have the resources and dignity they deserve.
With warm regards,
For The Lemuriya Foundation
S. Kumana Rajan
Managing Trustee




We can not do it alone. Join with us.